9.8.09



என் தேவதை

தேவதைகள் வெள்ளை உடையில்
தோளில் இறக்கையுடன் வானில்
இருந்து இறங்கி வருவார்கள் என்று
எனக்கு 5 வயதில் கற்பித்தார்கள்.......
ஆனால்
பல வண்ண உடையில் தோளில் கல்லூரி பையுடன்
தேவதை நீ பேருந்தில் இருந்து இறங்கி வருகையில்
அன்று எனக்கு பொய்யாய் கற்பித்தவர்கள்
மீது கோபம் வந்தது...........
பின்பு மெதுவாக புரிந்து கொண்டேன்,
அன்று நீ பிறந்திருக்கவே இல்லை ,
எனவே அவர்கள்
இந்த தேவதையை பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று . ...........

No comments:

Post a Comment