9.8.09


பசி

மதிய நேரம்,
கடும் பசி,
உணவகத்தில் இறால் உணவு வாங்கி,
உண்ண தொடங்கையில்,
எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று,
உன் தட்டில் இருந்த இறால்களை,
என் தட்டில் எடுத்து வைக்க முயன்ற
உன் கைகளும்,
உனக்கு ரொம்ப பிடிக்குமே என்று
என் தட்டில் இருந்து எடுத்து வைக்க முயன்ற
என் கைகளும்,
மோதி கொண்ட போது,
அன்பே !!!!!! அபி !!!!
நம் அன்பினை எண்ணி,
கலங்கின கண்கள் ...
எங்கோ தொலைந்து போனது
பசி ...

No comments:

Post a Comment