27.9.09



.....அபியும் நானும்.....

ஏன்டா ... உனக்கு என் மேல் கோபமே வராதாடா ???

இமைகள் படபடக்க,கருவிழிகள் சுழல,
என் மார்பினில் நாடி புதைத்து,
என் முகம் பார்த்து கேட்டாள்...?
என் அபி...

அவள் உதடு கடித்து பதில் சொன்னேன்,,
உன் மேலும் கோபம் வரும் செல்லமே என்று  ..

எப்போதெல்லாம் என்றாள் ... ???

புன்னகை இல்லாமல் உந்தன் முகம் பார்த்தால்...
பூ இல்லாமல் உந்தன் கூந்தல் பார்த்தால்...
நீ உண்ணும் உணவின் அளவு குறைந்தால்...
உன் தேகம் கொஞ்சம் மெலிந்தால்...

வாடிய உன் முகம் பார்த்தால்...
சிவப்பாய் உன் கண்கள் பார்த்தால்...
உந்தன் உடம்பில் ஏதேனும் காயம் பார்த்தால்...
இரவினில்  உந்தன் மேனியின் மீது ஆடை பார்த்தால்...


கோபத்தில் நீ அடித்து நம் மகள் கண்ணில் கண்ணீர் பார்த்தால்...

நீண்ட தூர  பயணத்தில் நீ அருகில் இல்லாமல் போனால்...

இரயில் பயணத்தில் நீ என்னருகில் அமராமல் எதிரே சென்று  அமர்ந்தால்...

தினசரி ஒரு நேர உணவாவது நீ ஊட்டி நான் உண்ணாவிட்டால்...


எனக்கு பிடித்த உணவை நீ துன்பப்பட்டு  சமைத்திட்டால்,

எனக்காக காத்திருந்து இரவில் உண்ணாமல் தூங்கிடும் உன்னை பார்த்தால்...

உன் தாய் வீட்டிற்க்கு நீ சென்றிருக்கும் அந்த  ,

உன் முகம் காணாத  நாட்கள் முழுவதும்,

தூங்கும் போது நெஞ்சில் சாய்ந்து தூங்கிய நீ
தூக்கத்தில் கொஞ்சம் என்னை விலகி தூங்கிடும் போதும் ..

நீ தூங்கிய பின் விளக்கொளியில்,
விடியும் வரை தூங்காமல்,
உன் முகம் பார்த்து இரசித்திடும் என்னை,
தூங்க வைக்க எண்ணி,
முகம் மூடிதூங்கும்
உன்னை பார்த்தால் கோபம் வரும்...

வயதான பின்னால் எனக்கு முன்னே உந்தன் உயிர் போனால்...

என்றேனும் இந்த கவிதையை நீ பார்த்து,
இந்த அன்பை எண்ணி,
உன் விழியோரம் கண்ணீர் வழிந்தால்
கூட கோபம் வரும்...

இப்படி பல விசயங்களில் உன் மேல் கோபம் வந்தாலும்,
உன் அழகு முகம் பார்த்த பின் வந்த
கோபம் எல்லாம்
ஒரு புன்னகையாய் மட்டுமே வெளிப்படும்
என் கண்ணம்மா .....

No comments:

Post a Comment